கலைஞர்கள் வாழ்வில் ஏணி
கலைஞர்கள் வாழ்வில் ஏணியாய் நின்று ஏற்றம் கண்டு போற்றிய மா மனிதர்
“மாருதி குமார்” அவர்கள்.திரையில் கண்ட நட்சத்திரங்களையும்,செவியில் கேட்ட கீதங்கள் இசைத்த பாவலர்களையும் நேரில் காணவைத்த கலாரசிகன் திரு. குமார் அவர்கள்.தனது பாரம்பரிய ஊரான கொட்டகலை நகர் ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய வளர்ச்சிக்காக பெரும் பங்களிப்பை நல்கி திருப்பணி ஆற்றிய சிறப்புக்குரியவர்.
தென்னகத் திரைவானில் நான் பல கலைஞர்களை சந்தித்து மகிழ்ந்த தருணங்களில்,அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர்களுள் திரு. குமார் முன்னிலையானவர்.தன் வாழ்நாளில்
பெரும் பங்கை கலைக்ககாகவே சேவை செய்த புரவலர் திரு. குமார் அவர்கள்.
எவ்வளவு உயரத்தில் இருக்கும் நடிகரோ அல்லது பாடகரோ கொழும்புக்கு அழைத்து வந்து குறித்த நாளில் மாபெரும் கலைவிழாக அமைத்து வெற்றி கண்டவர் திரு. குமார் அவர்கள்.திரு.மாருதி குமார் அவர்களின் ஈடு இணையற்ற இப்பேரிழப்பிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
எஸ். கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை