டெல்லி கோட்லா மைதானத்தில் அருண் ஜெட்லி உருவச்சிலை

மறைந்த முன்னாள் மத்திய மந்திரி அருண்ஜெட்லி கடந்த 1999-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 14 ஆண்டுகள் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தலைவராக இருந்தார். இதனை போற்றும் வகையில் டெல்லியில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு மைதானமான பெரோஷா கோட்லா மைதானத்துக்கு அருண்ஜெட்லி பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில், அருண் ஜெட்லியின் 68-வது பிறந்த நாளையொட்டி அந்த மைதானத்தில் 6 அடி உயரத்தில் அவரது முழு உருவச்சிலையை உள்துறை மந்திரி அமித்ஷா திறந்து வைத்தார்.