பழனியில் ரோப்கார் சேவை..

பழனியில் ரோப்கார் சேவை இன்று முதல் தொடக்கம்!

பழனி முருகன் கோவிலில் இன்று முதல் மீண்டும் ரோப் கார் சேவைதொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கோவில்கள் அடைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கோவில்கள் திறக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், பழனி முருகன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இழுவை ரயில், ரோப் கார் உள்ளிட்ட சேவைகள் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் பக்தர்களுக்கு மீண்டும் ரோப் கார் சேவை இயக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ரோப் கார் சேவை, காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை இருக்கும். மேலும் தரிசனத்திற்கு www.tnhrce.gov.in என்ற வலைத்தளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், நாள் ஒன்றுக்கு 1,500 பக்தர்களுக்கு மட்டுமே ரோப் காரில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்