சனியின் நட்சத்திரங்கள்…

உத்திரட்டாதி நட்சத்திரம் சனி பகவானின் மூன்று நட்சத்திரங்களில் ஒன்று. உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசியில் இடம் பெற்றிருக்கும் சுப நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் இது 26வது நட்சத்திரம்.

எண்கணிதப்படி சனி பகவானுக்கு உரிய எண் 8. நட்சத்திர வரிசைகளில் சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதி 26 வது நட்சத்திரம்.
இதன் கூட்டு எண் 8.

உத்திரட்டாதி நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு மீன் பிடிக்க பயன்படும் தூண்டில் போலவும், குழந்தையின் கால் பாதம் போலவும் இருக்கும்.

திருப்பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த….. கேட்டதையெல்லாம் தரக்கூடிய காமதேனு பிறந்தது உத்திரட்டாதி நட்சத்திரத்தில்தான். அது மட்டுமல்ல, திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு துணைவியாக இருக்கும், அலமேலுமங்காபுரத்தில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயார் பிறந்ததும் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தான்.

சனியின் மூன்று நட்சத்திரங்கள் பூசம், அனுஷம், உத்திரட்டாதி. இந்த மூன்று நட்சத்திரத்திற்கும் ஒரு சிறப்பு அம்சம் உள்ளது.

பூசம் திருப்பாற்கடலில் கிடைத்த அமிர்தம் இருக்கக்கூடியது
இந்த பூசம் என்னும் கலசத்தில்தான். மகாலட்சுமி தாயார் அவதரித்த அனுஷம் நட்சத்திரம் சனி பகவானுக்கு உரியது. கேட்டதையெல்லாம் தரக்கூடிய காமதேனு பிறந்தது உத்திரட்டாதியில்தான். இப்படி சனிபகவானின் மூன்று நட்சத்திரங்களும் பெருமைக்குரியதாக இருப்பது சிறப்பு மிக்க விஷயம்!

Astro Selvaraj Trichy
Cell : 9842457912