குவைத் எல்லை மூடல்! இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிப்பு?
புதியவகை கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க குவைத் மற்றும் சவூதி அரேபியா தங்கள் எல்லைகளை மூடியுள்ளன.
இந்நிலையில், சுமார் 300 வெளிநாட்டினர் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்று ஊடக அறிக்கை கூறுகிறது.
வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாடுகளிலிருந்து நேரடி விமானங்கள் இல்லாததால், ஐக்கிய அரபு அமீரகம் வழியாக சவுதி மற்றும் குவைத் செல்வதாக Gulf செய்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஹோட்டல் மற்றும் பிற கட்டண விடுதிகளில் 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தலை முடித்த பின்னர், அவர்கள் செல்ல வேண்டிய நாடுகளின் விமானம் ரத்து குறித்த செய்தி எதிர்பாராத விதமாக அமைந்துள்ளது.
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் குறித்த அச்சத்தின் காரணமாக குவைத் மற்றும் சவூதி அரேபியா தங்கள் தரைவழி மற்றும் கடல் எல்லைகளை மூடி, வணிக விமானங்களை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளன.
K.N. ஆரிப்
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.