குழந்தை ஒன்று மயக்க நிலையில்..

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், தண்டுக்காரன்பாளையம் கிராமம், அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் அருகில் vசுமார் 5வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று மயக்க நிலையில் இருந்ததாகவும், பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவலை தெரிவித்து அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டதில் குழந்தைக்கு மூச்சு திணறல் இருப்பதாக தெரியவந்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து விட்டதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.இந்த செய்தி திருப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நிருபர் ஊத்துக்குளி அரவிந்த்.