போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

கார்களின் பம்பர்களை நீக்காவிட்டால் ரூ 5,000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சாலை விபத்துக்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு, நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் பம்பர்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 2017 ஆம் வருடம் மத்திய போக்குவரத்து அமைச்சகம் காரிலிருந்து பம்பர்களை அகற்ற உத்தரவிட்டது. இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை தொடர்ந்து நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்களிடம் தெரிவித்து வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்தகட்ட நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இதற்காக பல்வேறு இடங்களில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.

மேலும் சோதனை நடக்கும் இடத்திலேயே பம்பர்களை கழற்றி விடுவதோடு, வாகன ஓட்டிகளையும் எச்சரித்து வந்தனர். இந்நிலையில், தற்போது விதிகளை மீறி பம்பர் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக , பம்பர்களை கழட்டாத வாகன ஓட்டிகளுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் தமிழக வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.