கடல் வாழ் உயிரினங்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

அமெரிக்காவில்
கடல் வாழ் உயிரினங்களுடன் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள தேசிய கடல் சரணாலயத்தில் கடல்வாழ் உயிரினங்களுடன் சான்டாகிளாஸ் கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.

2ஆயிரத்து 900 நாட்டிக்கல் மைல் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடல்வாழ் உயிரினங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த கடல்வாழ் உயிரினங்கள் மத்தியில் சான்டா கிளாஸ் கிறிஸ்துமசைக் கொண்டாடினார்.

கடலுக்கு அடியில் செல்வதற்கு உரிய பாதுகாப்பு கருவிகளை அணிந்தவாறு சான்டாகிளாஸ் பல வண்ண மீன்களுக்கு மத்தியில் தானும் உற்சாகத்துடன் நீந்த மகிழ்ந்தார்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.