கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!
வருடந்தோறும் கிறிஸ்துமஸ் திருவிழா அதிமுக மற்றும் சார்பில் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னையில் அதிமுக சார்பாக கிறிஸ்துமஸ் பெருவிழா கொண்டாடப்பட்டது.
அதிமுக சார்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள கன்வென்ஷன் ஹாலில் கிறிஸ்துமஸ் பெரு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி
கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்கள்.
மேலும், அமைச்சர் பெருமக்கள், அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பழனிசாமி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்ஜெரூசலேம் புனிதப் பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ. 20,000-த்தில் இருந்து ரூ.37,000 ஆக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்