ஜெகன் மோகன் ரெட்டி பிறந்தநாள் தினம்

ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ஆர் ஜெகன் மோகன் ரெட்டிபிறந்தநாள் ,
ஒய் எஸ் ஆர் ஜெகன்மோகன் மக்கள் முன்னேற்ற கழகம் தமிழ்நாடு சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் பொழிசலூரில் ஜெகன் மோகன் ரெட்டி பிறந்தநாள் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் .
ஒய் எஸ் ஆர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநிலத் தலைவர்
தளபதி டாக்டர் வசந்தம் ஏ.கணேசன், மற்றும் மாநில பொதுச் செயலாளர் எ. சாந்த மூர்த்தி தலைமையில் சிறுவர் சிறுமிகளுக்கு நோட் புத்தகம் மற்றும் பென்சில் மற்றும் பெண்களுக்கு சேலைகள் கொடுத்து கொண்டாடினார்கள். விழாவில் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ரமேஷ், மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் ராஜேஸ்சிங், மாநிலத் தலைவர்
தளபதி டாக்டர் வசந்தம்
ஏ.கணேசன் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இவ்விழாவில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.