வருங்கால செவிலியருக்கு உணவகத்தில் காத்திருந்த சர்ப்ரைஸ்!

வருங்கால செவிலியருக்கு உணவகத்தில் காத்திருந்த சர்ப்ரைஸ்!

அமெரிக்காவில் உள்ள Anthony’s At Paxon எனும் இத்தாலிய உணவகத்தில், ஒரு வாடிக்கையாளர் 205 டாலர் பில்லுக்கு 5,000 அமெரிக்க டாலரை டிப்ஸாக கொடுத்துள்ளார் என்பதைக் காட்டும் ரசீது ஒன்றின் புகைப்படத்தை, அந்த உணவகம் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இந்த பதிவு இணையத்தில் வைரலானது. படத்தைப் பகிர்ந்துகொண்டு, உணவகம் எழுதிய குறிப்பில், “”நன்றி என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் எங்களிடம் இல்லை

இங்குள்ள எங்கள் ஊழியர்களுக்கு நம்பமுடியாத ஆதரவு !! நன்றி! நன்றி !! எங்கள் ஊழியர்கள் விடுமுறை நாட்களைப் பெற உதவியதற்கு நன்றி !! நாங்கள் உங்களை அனைவரையும் நேசிக்கிறோம்,
பாராட்டுகிறோம்!!

எங்களைச் சுற்றி சிறந்த சமூகம் உள்ளது!!”” என பதிவிட்டுள்ளார்.

இந்த டிப்ஸ் செஸ்டரில் உள்ள வைடனர் பல்கலைக்கழகத்தில் செவிலியராகப் படித்துக்கொண்டு உணவகத்தில் பணியாளராகவும் இருக்கும் கியானா டிஏஞ்செலோவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கியானா டிஏஞ்செலோ இதுபற்றி கூறுகையில், “”நான் எதைக்கொண்டும் மகிழ்ச்சியாக இருப்பவள், என்னால் இதை நம்ப முடியவில்லை. நான் அந்த பணத்தை கல்லூரிக்கு ஒதுக்கி வைத்துவிட்டு, மற்றவர்களுக்கு நல்லது செய்ய இதை பயன்படுத்துவேன் என்றார்.

S. சுரேஷ்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.