நாவபழத்தின் மருத்துவ பயன்கள்!

சிலருக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறும். அவர்கள் நாவல் பழத்தின் விதைகளை காய வைத்து இடித்து பொடியாக வைத்துக் கொண்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலை, மாலை தண்ணீருடன் கலந்து அருந்த வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீர் போக்கு குறையும்.

நாவல் பழத்தை நன்கு அரைத்து அந்த சாற்றை தினமும் மூன்று வேளை தவறாமல் அருந்தி வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு குறைத்து விட வாய்ப்பு .

நாவல் பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் உடலில் இரத்த உற்பத்தியினை அதிகரிக்கும் மற்றும் உங்களுக்கு இரத்த சோகை நோய் வராமல் காக்க உதவுகின்றது.

நாவல் பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அதிகம் உள்ளது.

உங்கள் உணவுகளில் உள்ள கால்சியம் சத்தினை உறிஞ்சுவதற்கு மெக்னீசியம் மிகவும் உதவியாக இருக்கும். எனவே எலும்புகளின் வலிமையினை அதிகரிக்க தினமும் நாவல் பழத்தினை உண்லாம்.

வாய் முதல் குடல் வரை உள்ள புண்களை குணப்படுத்தும். மற்றும் பசியைத் தூண்ட உதவுகிறது.

பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக, வைட்டமின் ஈ தேவைப்படுகிறது. நாவல் மரத்தின் இலையின் சாற்றை கஷாயமாக்கித் தேன் அல்லது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை குறைய வாய்ப்பு இருக்கு.

ரசூல் மொய்தீன்
செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ்.