ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார் !

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற ஆறு வாரங்களுக்குப் பிறகு, ரஷ்ய அதிபர் புதின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜோ பைடனின் வெற்றியை அதிபர் தேர்தல் குழுவினர் நேற்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தனர். பைடனுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தாலும், அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிப்புக்குப் பிறகே வாழ்த்து தெரிவிப்பது பொருத்தமானதாக இருக்கும் என புதின் கருதினார்.

இதை அடுத்து பைடனை வாழ்த்தி உள்ள அவர், பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சர்வதேச பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் ரஷ்யாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என தெரிவித்துள்ளார்.

K.N. அப்துல் ரசாக் செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்