மீண்டும் ஊரடங்கு !

இங்கிலாந்தில் கொரோனா பரவலை தடுக்க மீண்டும் ஊரடங்கு !

இங்கிலாந்தில் கொரோனா பரவலை தடுக்க மூன்றடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்ஹாக்,லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வரும் புதன் கிழமை முதல் 3 அடுக்கு கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

து, லண்டன், ஹெர்ட்போர்ட்ஷையர், எசெக்ஸ் மற்றும் சில பகுதிகளில் வரும் புதன்கிழமை கட்டுப்பாடுகள் அமலுக்கு வருமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்டசேவைகளைத் தவிர்த்து விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என்றும், 3 அடுக்கு ஊரடங்கை தொடர்ந்து மக்கள் தங்கள் வீட்டுக்கு வெளியேவோ அல்லது தனியார் தோட்டங்களிலோ அல்லது வெளிப்புற இடங்களிலோ கூட தடை விதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

K.N. ஆரிப்
செய்தியாளர் தமிழ் மலர் மின்னிதழ்.