கலெக்டர் அதிரடி நடவடிக்கை!

கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த மூதாட்டி. கலெக்டர் அதிரடி நடவடிக்கை!

மதுரை மாவட்ட ஆட்சியர் மூதாட்டியின் மனுவை வாங்கி கொண்டு அவரது காரிலேயே கூட்டி சென்று புகாரை விசாரித்துள்ளார்

மதுரையில் கோரிப்பாளையம் பகுதியில் வசிப்பவர் மூதாட்டி பாத்திமா சுல்தானா. இவர் கடந்த சில ஆண்டுகளாக செல்வராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். அண்ட் வீட்டின் உரிமையாளர் இவரை வீடு காலிசெய்ய வைத்ததோடு அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி தர மறுத்துள்ளார்.

இதனால் பள்ளிவாசல் வளாகத்தில் தங்கி வந்த மூதாட்டி இது குறித்து புகார் அளிக்க கலெக்டர் அலுவலகம் சென்றுள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வெளியே கிளம்பி கொண்டிருக்கும் போது மூதாட்டி ஓரமாக அமர்ந்திருப்பதை கண்டு அவரை விசாரித்துள்ளார். மூதாட்டி தான் ஏமாற்றப்பட்டதை விவரித்ததும் அன்பழகன் புகாரை பெற்று கொண்டு மூதாட்டியை தனது காரிலேயே செல்வராஜபுரம் பகுதிக்கு கூட்டி சென்றார்.

அங்கு வீட்டின் உரிமையாளரிடம் நேரில் விசாரித்த கலெக்டர் மூதாட்டிக்கு முறையாக சேர வேண்டிய பணத்தை திரும்ப கொடுக்கும் படி கூறியுள்ளார். இதற்கு ஹவுஸ் ஓனரும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் கலெக்டர் அன்பழகன் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.5,000 கொடுத்து உதவியுள்ளார். இந்த சம்பவத்தால் செல்வராஜபுரம் மக்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர். மேலும் கலெக்டர் அன்பழகனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.