வறண்ட வானிலை..
சென்னையில் இரு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.
சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு தினங்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது ;- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் வண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சமாக 22 டிகிரி செல்சியசும் வெப்பநிலை இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சொல்லும்படியான மழை பெய்யவில்லை, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்துல் ரஜாக் செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.