ஐஎஸ்எல் கால்பந்து
ஐஎஸ்எல் கால்பந்து- ஐதராபாத் திடம் டிரா செய்த கொல்கொத்தா!
பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், கால்கத்தா – ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி, 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
முதல் பாதி ஆட்டத்தில், கொல்கத்தா அணியினர் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகளை, பிரமாதமாக தடுத்தனர் ஐதராபாத் அணியினர். இதனால், முதல் பாதி ஆட்டம் கோல்களின்றி முடிந்தது.
பின்னர், இரண்டாவது பாதி ஆட்டத்தில் 54வது நிமிடத்தில், கொல்கத்தாவின் மன்வீர் சிங் ஒரு கோலடித்து, தனது அணிக்கு முன்னிலைப் பெற்று தந்தார். ஆனால், அதற்கு பதிலடியாக 66வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், ஐதராபாத் அணியின் ஜோவா விக்டர் ஒரு கோலடித்து பதிலடி தந்தார்.
அதற்கடுத்து, இரு அணிகளும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.
எனவே, ஆட்டம் 1-1 என்று சமனில் முடிவடைந்தது.
தமீம் அன்சாரி
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.