எழுத்துத் தேர்வு

இரண்டாம் நிலை காவலர்கள் 10,906 காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளருக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளன.

அதனால் காவல் துறையில், மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை பிரிவுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 3,099 பேர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு , சிறை துறைக்கு, தீயணைப்பு துறைக்கு என மொத்தம் 10,906 பேர் இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

சென்னை உள்பட 37 மாவட்டங்களில் 499 தேர்வு மையங்களில் இன்று தேர்வு நடைபெறுகிறது.

சென்னையில் மட்டும் அண்ணா பல்கலைக்கழகம், பச்சையப்பன் கல்லுாரி உள்பட, 35 மையங்களில், 29 ஆயிரத்து 981 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

தேர்வர்கள் முக கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். முக கவசம் இல்லாதவர்கள் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது.

இன்று நடைபெறவுள்ள எழுத்து தேர்வை முன்னிட்டு சென்னை அண்ணா பல்கலை கழகத்தில், தேர்வு எழுத வருபவர்களின் உடல் வெப்ப நிலையை அறிய தெர்மல் ஸ்கிரீன், கிருமி நாசினி ஆகியவை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ரஹ்மான்
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.