உடல் எடையை குறைக்க..

உடல் எடையை குறைக்க 3 எளிய
வழிமுறைகள்!

இஞ்சி சாறைஎடையை குறைக்க 3 எளிய வழிமுறைகள் பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும் ஊற‌வைத்த‌ அவ‌லை காலையிலும், இர‌விலும் சாப்பிட்டு வ‌ர‌ உட‌ல் எடை குறையும். தினமும் 300 கிராம் கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட உடல் எடை குறையும்.

நத்தைச் சூரியின் விதைகளை பொன் வறுவலாக வறுத்து தண்ணீர் விட்டு சுண்ட வைத்து வடிகட்டி 100 மில்லியளவு எடுத்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர உடலில் எடை குறையும்.

பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான‌ கொழுப்பு குறையும். காசினிக் கீரையை உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும்.

ரசூல் மொய்தீன்
தமிழ்மலர் மின்னிதழ்.