பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் இணையும் தல அஜித்!

தல அஜித் அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கருடன் முதல் முறையாக இணைய உள்ளதாகவும் ,அது முதல்வன்-2 என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் தல அஜித் அடுத்ததாக பிரமாண்ட இயக்குனருடன் முதல் முறையாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது தல அஜித் அடுத்ததாக இயக்குனர் ஷங்கருடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதுவும் அந்த திரைப்படம் ஷங்கர் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த ‘முதல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது.இது உறுதி செய்யப்படாத தகவல் தான் .
கோபு,
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.