இந்தியா-ஜப்பான் விமானப் படைத் தளபதிகள் பேச்சுவார்த்தை!
சீனாவுடன் எல்லைப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், ஜப்பானுடன் ராணுவ உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது.
டெல்லி வந்த ஜப்பான் விமானப்படை தளபதி இசுட்சு ஷன்சி, இந்திய விமானப் படை தளபதி பதாரியை சந்தித்துப் பேசினார். இரு நாட்டு கடற்படையும் அண்மையில் கூட்டு போர் பயிற்சியில் பங்கேற்று இருந்த நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது. இருதரப்பிலும் பாதுகாப்பு துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, இரு நாட்டு விமானப் படை வீரர்களும் கூட்டாக போர் பயிற்சியில் ஈடுபடுவது குறித்து அப்போது ஆலோசனை நடத்தப்பட்டது.
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படைகளின் தளபதி பிபின் ராவத் ஆகியோரையும் ஜப்பான் விமானப்படை தளபதி சந்தித்துப் பேச இருக்கிறார்.
பரணி
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.