144 மாடிக் கட்டிடம் இடிக்கப்பட்ட சம்பவம் சாதனை

சவுதியில், 10 வினாடிகளில் 144 மாடிக் கட்டிடம் இடிக்கப்பட்ட சம்பவம் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
மினா பிளாசா டவர் என்ற கட்டிடம், 144 மாடிகளைக் கொண்டது. இது 541.44 அடி உயரம் கொண்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் வெறும் 10 வினாடிகளுக்குள் கடந்த மாதம் இடிக்கப்பட்டது. இதற்கு 6000 கிலோ பிளாஸ்ட்டிக் வெடி பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 18,000 தனித்தனி டெட்டனேட்டுகளும் இதில் பயன்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் வெறும் 10 வினாடிகளில் கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த இடம் சிறந்த சுற்றுலாத்தலமாக வடிவமைக்கப்பட உள்ளது.
இந்த கட்டிடம் 1972-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
அதிலிருந்து 40 ஆண்டுகளுக்கு மேலாக முக்கிய துறைமுகமாகச் செயல்பட்டு வந்துள்ளது.
கட்டிடம் இடிக்கப்படும் முன், சுற்றுப்புறப்பகுதிகளில், பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டிருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், “பிளாஸ்டிக் வெடிபொருட்கள் பயன்படுத்தக் காரணம், அவை மிகவும் பாதுகாப்பானைவை. மின் ஆப்பரேடர் மூலம் மட்டுமே இடிக்கமுடியும்.” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகில், அதிவேகமாக இடிக்கப்பட்ட உயரமான கட்டிடம் என்ற பட்டியலில், மினா பிளாசா கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இது குறித்து கின்னஸ் ரெக்கார்ட் குழு, அதற்கான சான்றிதழுடன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இந்த வீடியோவிற்கு பலரும் சுற்றுச்சூழலைப் பெருமளவில் அச்சுறுத்தும் செயல்.” என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
https://twitter.com/i/status/1332226194545192962
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.