வயிற்றுப் பிரச்சினைகளை காலி செய்யும் சுண்டைக்காய்!

சுண்டைக்காய் வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. வலி, கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் தன்மை கொண்டது.காய்ச்சல் இருக்கும்போது சுண்டைக்காயைச் சேர்த்துக் கொண்டால் ரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிக்கும். உடலில் உண்டாகிற காயங்களையும் புண்களையும் ஆற்றுகின்ற குணமும் சுண்டைக் காய்க்கு உண்டு.

ஆஸ்துமா, வறட்டு இருமல், நாள்பட்ட நெஞ்சுச் சளி, போன்ற தொந்தரவுகள் இருக்கிறவர்களுக்கு சுண்டைக்காய் அருமருந்து. ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க இது உதவும்.
வெண்டைக்காய், பாகற்காய், கத்தரிக்காய் போன்ற காய்களைக் கொண்டு காரக்குழம்பு, புளிக்குழம்பு செய்வது போலவே சுண்டைக்காயிலும் குழம்பு செய்யலாம்.

விருப்பப்பட்டால் குழம்பை இறக்குவதற்கு முன்பு அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இதனால் குழம்பின் சுவை மேம்படும். சுண்டைக்காய் வற்றலிலும் குழம்பு சமைக்கலாம்.

தமீம் அன்சாரி,
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்.