ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கும் கருஞ்சீரகம்!

கருஞ்சீரகம் சாதாரண சீரகத்தின் தோற்றத்தில் கருப்பு நிறத்தில் இருக்கும். கருஞ்சீரகம் ஆனது இறப்பைத் தவிற பிற எல்லா நோய்களையும் குணமாக்க வல்லது என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவ வல்லுனர்கள்.
இதில் தைமோ குவினோன் என்ற வேதிப்பொருள் பல்வேறு நோய்களை வருவதற்கு முன்பே காத்து வந்த நோய்களை கட்டுப்பாட்டில் வைக்க பேருதவி புரிகிறது.
குறிப்பாக பெண்களுக்கு குழந்தைப் பேறுக்குப் பின் கர்ப்பப்பையில் கசடுகளை நீக்க கருஞ்சீரகத்தைப் பொடியாக அரைத்து நீரிலோ அல்லது பாலிலோ கலந்து பனை வெல்லம் சேர்த்து சாப்பிட கர்ப்பப்பையில் உள்ள அனைத்து கசடுகளும் நீங்கி சுத்தமடைகிறது.
கருஞ்சீரகம் புற்றுநோய், சீறுநீரகக் கல், ஆஸ்துமா, வயிற்றுப் புண் போன்று பலவிதமான நோய்களைக் குணப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
ரத்தத்தில் அதிகப்படியாக இருக்கும் கொழுப்பை அகற்றி உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்கிறது .
உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் அல்லது டாக்சின்களை வெளியேற்றி உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதிலும் பெரும் பங்காற்றுகிறது.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.