வான் வெளியும் ராசியும்
வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம்.
இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில்
குறிப்பிடுவர்.
பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர்.
இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது.
இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும்
ராசி என்று பெயர்.
- மேஷம், 2. ரிஷபம்,
- மிதுனம், 4. கடகம்,
- சிம்மம், 6. கன்னி,
- துலாம், 8. விருச்சிகம்,
- தனுசு, 10. மகரம்,
- கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்.
*
மிதுனம் (GEMINI)
இது ஒரு ஆண் ராசி. காற்று ராசியும்கூட. இது ஒரு உபய ராசியும் ஆகும். இது இரட்டை ராசியாதலால், இரண்டு கோடுகளால் குறிப்பார்கள். இரண்டு கோடுகள் போட்டு அதை இணைத்தால் இந்த ராசியின் உருவம் கிடக்கும். C-தான் இந்த ராசியின் குறியீடு. இந்த ராசிக்கு அதிபதி புதன். அதுவும் ஒரு இரட்டை கிரகம்.
இரண்டு மனைவி, இரண்டுவிதமான வருமானங்கள்,
இரட்டைக் குழந்தைகள் ஆகியவற்றைக் குறிப்பது இந்த ராசியும், புதன் கிரகமும்தான். இந்த ராசியும், புதன் கிரகமும் புத்திசாலித்தனத்தையும், புத்திக்கூர்மையையும் குறிப்பவை. பொதுவாகவே, காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் புத்திசாலித்தனத்தைக் குறிப்பவை. புதன் கிரகம் ஒரு நிலையில்லா தன்மை கொண்டது. இது சூரியனுக்கு முன்னும் பின்னும் நிலையில்லாமல் சென்றுகொண்டிருக்கும். ஆகவே, இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் ஒரு நிலையில்லா சுபாவம் கொண்டவர்கள். எதிலும் ஸ்திரமான பிடிப்பு இல்லாதவர்கள். உடல் உறுப்புகளில் கைகள், தோள்பட்டை, நுரையீரல் ஆகியவற்றைக் குறிப்பது இந்த ராசி.
Astro Selvaraj Trichy
Cell: 9842457912