அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு!


மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட கழக செயலாளர்கள்-ஆலோசனை கூட்டம்!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்
கழக இணை ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமை கழகத்தில் (14-12-2020) திங்கட்கிழமை மாலை 4:30 மணிக்கு,மண்டல பொறுப்பாளர்கள் அமைச்சர் பெருமக்கள் மாவட்ட கழக செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது, கடந்த (20-11-2020)
தலைமை கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது சட்டமன்ற பொது தேர்தல் சம்பந்தமாக என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து வழங்கப்பட்ட ஆலோசனைகளின் படி தாங்கள் மேற்கொண்ட பணிகள் குறித்த அனைத்து விவரங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தவறாமல் கலந்து கொள்ளுமாறு கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்,
கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி
கே.பழனிச்சாமி
ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
செந்தில்நாதன்,
இணைச் செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.