கிவி பழத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது.

பல வகை பழங்கள் இன்று கடைகளில் கிடைகின்றது. அவை ஒவ்வொன்றிற்கும் வெவேறு சத்துக்களும், நற்குணங்களும் இருகின்றது.
இந்த வகையில் கிவி(Kiwi) பழம் இன்று அனைவருக்கும் பிரபலமாகிவரும் ஒரு பழ வகையாக இருகின்றது. கிவி பழத்தில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
இது உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் சரும நலத்திற்கும் பயன் தருகின்றது. ஒரு சிறிய முட்டை வடிவத்தில், சப்போட்டாவை போன்று தோற்றம் கொண்டது இந்த கிவி பழம். இனிப்பும் புளிப்பும் கலந்த ஒரு சுவையை இது தரும். இதில் அதிக கலோரிகள் நிறைந்துள்ளது.
சிட்ரஸ் வகை பழங்களுள் கிவி பழம் மிகவும் சுவையானதாக இல்லாவிட்டாலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது.
கிவிப் பழம் இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கலந்தது.
இதனால் தான் இது பல்வேறு கேக்குகளில் டாப்பிங்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பலருக்கு இந்த கிவி பழத்தை கடைகளில் பார்த்தும் வாங்காமல் இருப்பர். இதற்கு அந்த பழத்தின் மகிமை தெரியாதது தான்.
பழங்களில் கிவி பழம் அபூர்வமான ஒன்று. உடம்பிற்கு பயனளிக்க கூடிய பழங்களை சாப்பிட்டால் நம் உடல் நலத்திற்கு நல்லவைகையாக அமையும்.
இதனை மக்கள் அதிசய பழம், ஒரு வகையான சைனீஸ் நெல்லிக்கனி என்றெல்லாம் அழைப்பார்கள். இது மருத்துவ குணம் வாய்ந்த, உடலுக்கு மிகச் சிறந்த பழம்.
கிவி பழத்தில் ஏராளமான மினரல்கள், விட்டமின் சத்துக்கள் உள்ளன. சிட்ரஸ் ரக பழ வகையை சார்ந்த கிவி பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ அதிகம். இது தோல் நோய்கள், இதயநோய், புற்றுநோய், உடல் பருமன் போன்ற நோய்கள் தாக்காமல் இருக்க வைட்டமின் சியை பயன்படுகிறது.
கிவி பழத்தில் உள்ள நார்சத்துகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுபடுத்துவதால் டயாபடீஸ் நோய் குணமாகும்.
உடல் எடையைக் குறைக்க
கிவி பழத்தை ஒருவர் தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு கிவி மிகச்சிறப்பான பழம்.
புற்றுநோய்
டையட் மேற்கொள்வதற்கு சிறந்ததாகவும் உள்ளது. ஏனென்றால் இதில் இரும்புச்சத்து இருப்பதால் பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கும். மேலும் இரும்புச்சத்து கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது.
கண்களின் நலம்
கிவி பழத்தில் வைட்டமின் “ஈ ” சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும். கண்பார்வை மங்குதல், மாலை கண் நோய் போன்றவை ஏற்படுவதை தடுத்து கண்களில் இருக்கும் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து கண்பார்வை திறனை பிரகாசிக்க செய்கிறது. எனவே கண்களின் நலம் பேண கிவி பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.
மல சிக்கலை போக்க
மல சிக்கலை போக்க, இதனை ஒரு நாளைக்கு இரண்டு என்ற முறையில் நான்கு வாரம் சாபிட்டால் முற்றிலும் இந்த பிரச்சனை குணமடையும்
இரத்த அழுத்தம்
ஒரு நாளைக்கு மூன்று என்ற விகிதத்தில் எட்டு வாரத்திற்கு தொடர்ந்து இதனை சாபிட்டால் அதிக இரத்த அழுத்தம் குணமடையும்
நீரிழிவு நோயாளி
நீரிழிவு நோயாளி பயப்படாமல் இந்தப் பழத்தை சாப்பிடலாம். கிவி பழம், இனிப்பானதுதான் என்றாலும், அதன் சர்க்கரை குறியீடின் அளவானது மிகவும் குறைவு. அதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மற்ற பழங்களைப் போன்று விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகவும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் இதை உண்ணலாம்.
S. சுரேஷ்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.