போட்டியின்போது பொதுவான மருத்துவர் அவசியம்! மார்க் வாக் கோரிக்கை!

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கார்பெர்ராவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி பேட்டிங்க செய்தபோது, இறுதிகட்டத்தில் வெளுத்து வாங்கிய ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் குவித்தார். ஆனால் 18-வது ஓவரில் மீச்செல் ஸ்டார்க் வீசிய பந்து ஜடேஜாவின் ஹெல்மெட்டை கடுமையாக தாக்கியது. இதனால் ஜடேஜா நிலைகுலைந்து போனார்.

ஜடேஜா சற்று மயக்கமாக இருப்பதாக தோன்றியதால் கன்கசன் மாற்று வீரராக சாஹல் களம் இறங்கினார். அவர் 3 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஆனால் ஜடேஜாவுக்கு உண்மையிலேயே விளையாட முடியாத அளவிற்கு மயக்கம் இருந்ததா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில், ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கடும் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், விமர்சனத்தை தடுக்க ஐசிசி போட்டியின்போது பொதுவான டாக்டரை நியமிக்க வேண்டும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேனும், கிரிக்கெட் வர்ணனையாளருமான மார்க் வாக் வலியுறுத்தியுள்ளார்.

K.N. ஆரிப்
செய்தியாளர், தமிழ்மலர் மின்னிதழ்