நிலவுப் பாறைகளுடன் திரும்புகிறது சீன விண்கலம்!

நிலவில் இந்தியா உட்பட பல நாடுகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சீனாவும் சாங்கி-5 விண்கலத்தை நவம்பர் 24ம் தேதி நிலவுக்கு அனுப்பியிருந்தது. அந்த விண்கலம் தற்போது மாதிரிகளையும், பாறைகளையும் சேகரித்துக் கொண்டு பூமிக்கு வரத் தயார் நிலையில் உள்ளது.

நிலவிலிருந்து கற்கள், பாறைகளை பூமிக்குக் கொண்டு வந்து ஆய்வுகள் மேற்கொள்வதற்காகவே இந்த விண்கலத்தை சீனா விண்ணில் ஏவியது. அமெரிக்கா, ரஷியாவுக்கு அடுத்தபடியாக இந்த திட்டத்தை சீனா தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

சீனாவின் விண்வெளி திட்டங்களிலேயே இது மிகவும் சிக்கலானதும் தோல்விக்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டதாகவும் அமைந்திருப்பதாக சீன நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.நிலவில் கற்கள், பாறைகள் போன்றவற்றை சேகரித்த அந்த ஆய்வுக் கலம் நிலவுப் பரப்பிலிருந்து சென்ற வாரத்தில் புறப்பட்டு பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.