Latest News குவைத் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி தொடக்கம்! December 7, 2020December 7, 2020 AASAI MEDIA மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத்தில் நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்துக்கான தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. அங்கு 50 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் 29 பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்டோர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.நேற்று முன்தினம் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த நிலையில் தேர்தல் பார்வையாளர்கள் வாக்குப் பெட்டிகளை பிரித்து வாக்கு எண்ணும் பணியை தொடங்கினர்.இந்த பணிகள் முடிந்தவுடன் குவைத்தின் அமீர் புதிய பிரதமரை தேர்வு செய்வார். அந்த பிரதமரின் தலைமையில் அமைச்சரவை செயல்படத் தொடங்கும். தற்போதுள்ள அரசு தேர்தலுக்கு பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுS.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.