கானத்தூர் ரெட்டிகுப்பம் சாலையில் மழை நீர் தேக்கம்!

கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதில் நிவர் புயல் மற்றும் புரெவி புயலால் அங்கங்கே கனமழை கொட்டிதீர்த்தது.

இதனால் மழை தண்ணீர் அங்கங்கே தேங்கி நிற்கிறது. அதன் ஒரு பகுதியில் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ரெட்டி குப்பம் ஊராட்சி, கானத்தூர் ரெட்டிக்குப்பம் சாலையில் வாஞ்சிநாதன் தெரு, சர்தார் வல்லபாய் பட்டேல் 2வது தெரு மற்றும் இதர தெருவில் மழை தண்ணீர் வெள்ளம்போல் நின்று வருவதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் வெளியே செல்வதற்கு பெரும் சிரமமாக இருந்து வருகிறது.

ஆகையால் இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மக்களின் நலன் கருதி இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து தேங்கிய மழை நீரை உடனே அகற்றுமாறு தமிழ்மலர் மின்னிதழ் மீடியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இவன்
N.அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்