அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டம் அறிவிப்பு!
சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக்கொள்ள கால அவகாசம் விதித்து தமிழக அரசு இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. உணவு மற்றும் நுகர்வோர் பொருள் வழங்கல் துறை அமைச்சர் காமராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பொதுவினியோக திட்டத்தில் 5 லட்சத்து 80 ஆயிரத்து 298 குடும்ப அட்டைகள் சர்க்கரை பெரும் அட்டைகளாக உள்ளன. அவர்கள் அனைவரும் அரிசி பெறும் அட்டைதாரர்களாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை ஏற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி விண்ணப்பத்துடன், அட்டை நகலை இணைத்து www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் டிசம்பர் 20 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவியாளர்களிடம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தகுதி அடிப்படையில் பல அட்டைகள் அரசு குடும்ப அட்டைகள் ஆக மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகையாக 1,000 ரூபாய் ஆகியவை சக்கரை அட்டைதாரர்களுக்கு கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் பெரும்பாலானோர் அரிசி அட்டைதாரர்களாக தங்களை மாற்றிக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.