மதுரை: மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்தார்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (4-12-2020) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார்கள்.

உடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ.பி.வேலுமணி, வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை நகராட்சி ஆணையர் டாக்டர் கே.பாஸ்கரன் இ.ஆ.ப, மதுரை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் இ.ஆ.ப, மதுரை மாநகராட்சி ஆணையர் ச. விசாகன் இ.ஆ.ப, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர்.
தமிழ்மலர் மின்னிதழ்