‘மாத்தனும் எல்லாத்தையும் மாத்தனும்’ : தங்கம் விலை இப்படியே ஏறிகிட்டு போன எப்படி வாங்குறது..!!!

கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, 3வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இதனால், ரூ.40 ஆயிரத்தை கடந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த வாரத்தில் இருந்தே தங்கத்தின் விலை சரிந்து காணப்பட்டது. ஆனால், அதற்கு நேர் மாறாக இந்த வாரம் தொடர்ந்து விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இதனால், மீண்டும் தங்கம் விலை ரூ.37 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

3வது நாளாக உயர்வுடன் காணப்படும் தங்கத்தின் விலை, இன்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.4,641-க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.37,128-க்கு விற்பனையானது. அதேபோல, சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.67.40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், மாலையிலும் தங்கம் உயர்ந்தே காணப்பட்டுள்ளது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.4,656-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.37,248-க்கு விற்பனையாகிறது. அதேபோல, சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.67.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.