சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்வு!
தமிழகத்தில் கேஸ் சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வீட்டுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரின் விலை 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 610 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த வீடுகளுக்கான சிலிண்டர் 660 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.
அதே போல் கடைகளில் பயன்படுத்தும் கமர்ஷியல் சிலிண்டரின் விலை 62 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனையடுத்து வர்த்த சிலிண்டர் இனி 1,293 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அந்நிய செலாவணிக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பை பொறுத்து பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டரின் விலை மாறுபடும்.
S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்