ஜப்பான்- டோக்கியோ கடலில் மீண்டும் வைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் வளையங்கள்!

டோக்கியோ,
இந்த ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. நடப்பு ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக யோகோஹாமாவில் கப்பலில் ஒலிம்பிக் வளையங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

ஆனால் ஒலிம்பிக் போட்டி தள்ளி வைக்கப்பட்டதால் அகற்றப்பட்ட அந்த வளையங்கள் தற்போது மீண்டும் அந்த கப்பலில் மக்கள் பார்வைக்காக ஒலிம்பிக் வளையங்கள் வைக்கப்பட்டுள்ளது. 15 மீட்டர் உயரம் மற்றும் 33 மீட்டர் அகலத்தில் நீலம், கறுப்பு, சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் அந்த வளையங்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வளையங்கள் ஒவ்வொரு இரவும் மின் விளக்குகளால் ஒளிரவைக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகளும், ஆகஸ்ட் 24ம் தேதி பாரா ஒலிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளது.

S. முஹம்மது ரவூப்
தமிழ்மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்.