ஜோ பைடன் அமெரிக்க புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
அமெரிக்க அதிபராகத் பதவியேற்க உள்ள ஜோ பைடன் தனது செல்ல நாயுடன் விளையாடிய போது வலது காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்புக்கு எதிராக போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிப் பெற்றார். அவர், வருகிற ஜனவரி 20ம் தேதி நாட்டின் புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நேற்று முன் தினம் இரவு தன் இரு நாய்களில் ஒன்றான மேஜருடன் விளையாடும்போது அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் டெலாவேரின் நெவார்க்கிலுள்ள எலும்பியல் நிபுணரைச் சந்தித்ததாக அவரது அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
S.ரவூப், தலைமை செய்தி ஆசிரியர்