மருத்துவமனை செய்தி

தமிழ் மலர் மின்னிதழ் கொடைக்கானல் செய்தியாளர் ரமேஷ் அவர்களின் உறவுமுறை தம்பி ஆகிய திவாகர் (கார் ஓட்டுநர்), வயது 23, நேற்று முன்தினம் கொடைக்கானல் இருந்து சென்னைக்கு சவாரி ஏற்றி வந்துள்ளார்.

சென்னையில் அதிகாலை 3 மணி அளவில் சவாரி வந்தவர்களை விமானம் நிலையத்தில் இறக்கிவிட்டு, பின்னர் பம்மலில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு ஓய்வு எடுக்க சென்றுள்ளார். அதன்பிறகு காலை 10 மணி அளவில் லேசாக நெஞ்சு வழி ஏற்பட்டிருக்கிறது. உடனே தன்னுடைய உறவினர்கள் காலை 10.30 மணி அளவில் குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதன்பிறகு அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர் பரிசோதித்த பின்னர் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியில் மாரடைப்பால் உயிர் பிரிந்துவிட்டது என்று தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து கொடைக்கானல் செய்தியாளர் ரமேஷ் தமிழ் மலர் மின்னிதழ் ஆசிரியர் திரு.சிரஞ்சீவி அனிஸ் அவர்களை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்ததும் உடனே தமிழ் மலர் மின்னிதழ் ஆசிரியர் பொழிச்சலூரில் உள்ள நமது செய்தி ஆசிரியர் S.முஹம்மது ரவூப் அவர்களை இரவு 8.30 மணி அளவில் தொடர்பு கொண்டு விவரத்தை கூறி நேரில் செல்லுமாறு கூறினார்.

அதனை தொடர்ந்து செய்தி ஆசிரியர் குரோம்பேட்டை உள்ள அரசு மருவமனைக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார்.

மருத்துவமனையில் திவாகர் (கார் ஓட்டுநர்) உறவினர் மற்றும் குடும்பத்தினரை நமது தமிழ் மலர் மின்னிதழ் செய்தி ஆசிரியர் இரவு 9 மணி அளவில் சந்தித்து விவரத்தை கேட்டறிந்தார்.

மாலை முதல் யாரையும் இறந்தவர் திவாகர் உடலை பார்க்க அனுமதிக்கவில்லை என்பது தெரியவந்தது.

தமிழ் மலர் செய்தி ஆசிரியர் உடனே மருத்துவமனையில் சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் ஊழியர்களை சந்தித்து பேசிய பின்னர் திவாகர் உடலை பார்க்க அனுமதி அளித்துள்ளனர்.

மேலும் உடலை திரும்ப பெற அந்த பகுதிக்கு உட்பட்ட S6 சங்கர் நகர் காவல் நிலையம், காவல் துறை அதிகாரி, காவல் ஆய்வாளர் திரு. பறக்கத்துல்லாஹ் மற்றும் துணை ஆய்வாளர் திரு.செல்வமணி அவர்களை தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை கூறி FIR யை உடனே வழங்குமாறு தமிழ் மலர் செய்தி ஆசிரியர் கேட்டுக்கொண்டார்.

மேலும் காவல் நிலையத்தில் இருந்து அனைத்து ஆதரவு என்றும் உங்களுக்கு வழங்கப்படும் என்று காவல் ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் தெரியப்படுத்தினர்.

இதற்காக உடனே நடவடிக்கை எடுத்த தமிழ் மலர் மின்னிதழ் ஆசிரியர் திரு.சிரஞ்சீவி அனிஸ் அவர்களுக்கும், செய்தி ஆசிரியர் S.முஹம்மது ரவூப் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவன்
N.அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ் மலர் மின்னிதழ்
தலைமை நிர்வாகம்.