கானத்தூர் J12 ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் சிறப்பான பணிகள் மற்றும் சீரிய செயல்பாடுகள்!
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், கானத்தூர் ரெட்டி குப்பம் ஊராட்சி, நிவர் புயல் தாக்கத்தினால் பனையூர் 4th அவென்யூ சாலையில் மரங்கள் சரிந்து விழுந்தன.

அந்த பகுதியில் உள்ள மக்கள் கானத்தூர் போலீஸ் ஸ்டேஷன் ஜே12க்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் வந்தவுடன் காவல் ஆய்வாளர் திரு.வேலு அதனை நேரில் சென்று பார்வையிட்டு உடனே அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

அதன் பிறகு காவல் ஆய்வாளர் திரு.வேலு தலைமையில் துணை ஆய்வாளர் திரு. கோபி முன்னிலையில் மற்றும் காவலர்கள் உதவியுடன் பனையூர் 4th அவென்யூ சாலையில் சரிந்து கிடந்த மரத்தை உடனே அப்புறப்படுத்தினர்.
- N.அப்துல் சமது