தீபாவளிக்காக சொந்த ஊருக்கு புறப்பட்ட மக்கள்; பெருங்களத்தூரில் கூட்ட நெரிசல்

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடவுள்ள நிலையில், சென்னையில் இருந்து நேற்று முதலே சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று காலையிலேயே சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டு சென்றனர். மேலும் இன்று காலை முதலே பொதுமக்கள் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களிலும் வெளியூர் புறபட்டு சென்றன.

இதன் காரணமாக தீபாவளி சமயத்தில் வழக்கமாக இருக்கும் கூட்டத்தைவிட இன்று மாலை பெருங்களத்தூரில் காணப்படும் கூட்டம் குறைவாகவே இருந்து. பேருந்துகளில் எப்போதும் நிரம்பி வழியும் கூட்டம் இல்லை. பயணிகளுக்கு எளிதில் இருக்கைகள் கிடைத்தன.

பெருங்களத்தூரில் சாலைகள் அகலப்படுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் விரைவாக சென்றன.

இதன்காரணமாக நூற்றுக்கணக்கான சிறப்பு பேருங்களில் இருக்கைகள் கிடைத்ததால் பெருங்களத்தூரில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்…

செ. சுரேஷ்